பெண்ணுக்கு கொலை மிரட்டல்
நரசிங்கபுரம்:செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் பொற்செல்வி, 35. இவர் நரசிங்கபுரம் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வரும் சரவணன், 55 மற்றும் அமர்நாத், 30 ஆகிய இருவரும் கடந்த 10ம் தேதி பொற்செல்வியின் வீட்டிற்குள் நுழைந்து ஆபாசமாக பேசி 10 லட்சம் ரூாபய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து கம்பியால் தாக்க முயன்றனர். இதுகுறித்து பொற்செல்வி கொடுத்த புகாரின்படி மப்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.