நுாறு நாள் வேலை திட்டத்தில் 50,000 மரக்கன்று நட முடிவு
திருத்தணி:ஊரக வளர்ச்சி துறையின் சார்பில், நுாறு நாள் தொழிலாளர்கள் மூலம் ஒரே நாளில், 50,000 மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், மொ த்தம் 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பசுமை திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக, அடுத்த மாதத்திற்குள் நுாறு நாள் தொழிலாளர்கள் மூலம், ஊராட்சிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் சாலையோரம், வேப்பம், புங்கை, நாவல், வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட் டுள்ளது. இதற்காக ஊராட்சிகளில், நுாறு நாள் தொழிலாளர்கள் மூலம் குழிகள் தோண்டும் பணிகள் நடந்து வருகிறது. ஒரே நாளில் அனைத்து ஊராட்சிகளிலும், 50,000 மரக்கன்றுகள் நடுவதற்கு, மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. நேற்று திருத்தணி ஒன்றியத்தில் மரக்கன்றுகள் நடுவ தற்கு குழிகள் தோண்டும் பணிகளை, ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குநர் குமார், மாவட்ட செயற்பொறியாளர் ராஜவேல் உள்ளிட் டோர் பார்வையிட்டனர்.