அரசு பள்ளியில் நுழைந்த மான்
பொன்னேரி: பொன்னேரி அடுத்த உப்பளம் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில், நீண்ட கொம்புகளுடன் இருந்த புள்ளிமான் புகுந்தது. கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்ததால், மிரண்டு போன மான், அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது. பின், அங்கிருந்த மரத்தின் நிழலில் ஓய்வெடுத்தது. தகவலறிந்து விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி வனத்துறையினர், போர்வையை கொண்டு புள்ளிமானை பிடிக்க முயன்றபோது, அவர்களிடம் இருந்து தப்பி, அருகில் இருந்த புதரில் சென்று மறைந்தது. வனத்துறையினர் சிறிது நேரம் தேடினர். அதன்பின் திரும்பி சென்றனர். இந்த மான், ஆண் இனத்தைச் சேர்ந்த அச்சு மான் வகையைச் சேர்ந்தது எனக் கூறப்படுகிறது.