உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

பொன்னேரி:சென்னை அண்ணா பல்கலை மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகருடன், தொடர்புடைய நபரை கண்டறிய வலியுறுத்தி, அ.தி.மு.க.,வினர் 'யார் அந்த சார்' என கேட்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சட்டசபையிலும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'யார் அந்த சார்' என, பேட்ஜ் அணிந்து வருகின்றனர்.இந்நிலையில், , பொன்னேரியில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலர் பலராமன் தலைமையில்,அக்கட்சியினர் வாகனங்களில், 'யார் அந்த சார்' என்ற ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம் மேற்கொண்டனர்.மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடைய, 'யார் அந்த சார்' என்பது தெரியும் வரை போராட்டங்கள் தொடரும் என, அக்கட்சியினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ