மேலும் செய்திகள்
பழநியில் குவிந்த பக்தர்கள்
28-Oct-2024
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் கந்தசஷ்டி விழா நிறைவடைந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இந்நிலையில், நேற்றும் மலைக்கோவிலில் காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.இதனால் பொதுவழியில் மூலவரை தரிசிக்க மலைக்கோவிலில், 750 மீட்டர் துாரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, 4 மணி நேரத்திற்கு பின் மூலவரை தரிசனம் செய்தனர்.அதே போல் நுாறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து மூலவரை வழிப்பட்டனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக, 20க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருந்தனர்.
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் நேற்று மதியம் முருகன் கோவிலுக்கு வந்தார். அவரை கோவில் அறங்காவலர் சுரேஷ்பாபு வரவேற்றார். ஆபத்சகாய விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவர் முருகப்பெருமான் ஆகிய சன்னிதிகளில் சிறப்பு பூஜை நடத்தி வழிப்பட்டார். தொடர்ந்து அமைச்சருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.**
28-Oct-2024