உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வேளாண் மையத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை

வேளாண் மையத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை

திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், 27 ஊராட்சிகளில் விவசாயமே பிரதான தொழில். இதில், அதிகளவில் நெல், கரும்பு, வேர்க்கடலை, காய்கறி மற்றும் பயிறு வகை ஆகியவை பயிரிடுகின்றனர்.வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு நெல், வேர்க்கடலை விதைகள், உரம் மற்றும் இடுபொருட்களை மானிய விலையில் வழங்குகின்றனர்.இதற்காக, திருத்தணி மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய இரண்டு வேளாண் விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை மையங்களில், விவசாயிகள் பணமாக கொண்டு வந்தால் மட்டுமே, விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.இந்நிலையில், வேளாண் துறையினர் விவசாயிகள் நலன் கருதி, இந்த வேளாண் மையங்களில் டிஜிட்டல் முறை விற்பனையை தற்போது கொண்டு வந்துள்ளது.இதுகுறித்து திருத்தணி வேளாண் பொறுப்பு உதவி இயக்குனர் பிரேம் கூறியதாவது:கடந்த வாரம் வரை விவசாயிகள் விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்களை, வேளாண் விற்பனை மையத்தில் பணம் கொடுத்து வாங்கி வந்தனர்.தற்போது ஏ.டி.எம்., கார்டு, ‛க்யூஆர்' கோர்டு மற்றும் ‛யுபிஐ' ஆகியவற்றின் வாயிலாக பணப் பரிவர்த்தனை செய்யலாம். எனவே, விவசாயிகள், 'டிஜிட்டல்' முறையில் பணம் பரிவர்த்தனை செய்து விதைகள், இடுபொருட்கள் உள்ளிட்டவற்றை பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ