உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காக்களூரில் பாழடைந்த நிலையில் மண் பரிசோதனை அலுவலகம்

காக்களூரில் பாழடைந்த நிலையில் மண் பரிசோதனை அலுவலகம்

திருவள்ளூர்:மாவட்ட மண் ஆய்வு கூட வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் பாழடைந்து உள்ளது.திருவள்ளூர் - ஆவடி சாலை, காக்களூரில் மாவட்ட வேளாண் துறையின் மண் ஆய்வு கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம், கடந்த, 1987ல் கட்டப்பட்டது. இங்கு மாவட்டம் முழுதும் இருந்தும், விவசாயிகள் தங்களின் நிலத்தின் மண் தன்மையை பரிசோதனை செய்து, விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், தற்போது அந்த கட்டடம் பழுதடைந்து காணப்படுகிறது. கட்டடத்தின் பக்க சுவரில் விரிசல் ஏற்பட்டும், இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்ற வகையிலும், பாழடைந்து உள்ளது.இதனால், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, பாழடைந்த அந்த கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, ஊழியர்கள், கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பாழடைந்த அந்த கட்டடம் இடித்து அகற்றிவிட்டு, விரைவில் புதிய கட்டடம் கட்ட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கீடு பெறப்பட்டதும், அந்த கட்டடம் அகற்றப்பட்டு, புதிதாக அலுவகம் கட்டப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி