உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தினமலர் செய்தி எதிரொலி -- படங்கள் மட்டும் நசரத்பேட்டையில் பயணியர் நிழற்குடை சீரமைப்பு

தினமலர் செய்தி எதிரொலி -- படங்கள் மட்டும் நசரத்பேட்டையில் பயணியர் நிழற்குடை சீரமைப்பு

திருவள்ளூர்,

09.12.2024/கடம்பத்துார் /தி.நடராஜசிவா/ 7904308590/ கீ:1199 /12:00 *** சார் இந்த செய்தியை காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சேர்க்கவும். நன்றி** ****

சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அடுத்துள்ள நசரத்பேட்டை பகுதியில் உள்ள நிழற்குடையை பயன்படுத்தி நசரத்பேட்டை, வரதராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பணிக்கு செல்லும் பகுதிவாசிகள் பயன்படுத்தி காஞ்சிபுரம், திருவள்ளூர் மார்க்கமாக சென்று வருகின்றனர்.இப்பகுதியில் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இணைப்பு சாலையில் நான்கு பயணியர் நிழற்குடைகள் உள்ளன.இந்த நிழற்குடைகள் போதிய பராமரிப்பு இல்லாததால் செடி, கொடிகள் வளர்ந்து, விளம்பரங்கள் ஒட்டும் இடமாகவும், வாகனங்கள் நிறுத்துமிடமாகவும் மாறியுள்ளதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பகுதிவாசிகள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் வெயிலிலும், மழையிலும் கடும் சிரமப்பட்டு வருவதாக நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணியர் நிழற்குடையை சூழ்ந்திருந்த புதர்கள் மற்றும் வாகனங்களை அகற்றி பயணியர் பயன்படுத்தும் வகையில் சீரமைத்தனர்.நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியால் தேசிய நெடுஞ்சாலையோரம் செடி, கொடிகள் சூழ்ந்திருந்த பயணியர் நிழற்குடை சீரமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ