உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தினமலர் செய்தி எதிரொலி ஏரிக்கரை சாலை சீரமைப்பு

தினமலர் செய்தி எதிரொலி ஏரிக்கரை சாலை சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், ராஜாநகரம் ஏரிக்கரை அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரை சாலை வழியாக தினசரி நுாற்றுக்கணக்கான வாசகனங்கள், பள்ளிப்பட்டு மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு சென்று வருகின்றன. இந்நிலையில், ஏரிக்கரையை ஒட்டி சாலையோரத்தில் நெடுஞ்சாலை துறையினர் உலோக தடுப்புகளை அமைத்தனர். இந்த உலோக தடுப்புகள், புதரில் மறைந்து கிடந்தன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் இந்த வழியாக பயணித்து வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தற்போது புதர் அகற்றப்பட்டு, சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி