மேலும் செய்திகள்
சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவர்
12-Jan-2025
திருவாலங்காடு:திருவாலங்காடில் அரசு மேல்நிலைப் பள்ளி, வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 856 மாணவ --- மாணவியர் பயின்று வருகின்றனர்.இங்கு பள்ளி வளாகத்தில், 2012- - 13ம் ஆண்டு, தேசிய ஊரக குடிநீர் திட்டம் வாயிலாக, 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டது.இந்த தொட்டி, மூன்று ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளதுடன் அமைக்கப்பட்ட குழாய்களும் சேதமடைந்தன. இதனால் மாணவர்கள் கூடுதல் குடிநீரின்றி சிரமப்பட்டனர்.இதுகுறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியானதையடுத்து, பள்ளி உட்கட்டமைப்பு நிதி மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் உடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் குழாய்களை சீரமைத்து, தண்ணீர் வினியோகிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
12-Jan-2025