உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி அரசு பள்ளியில் சிறப்பு வகுப்பு போதிய ஆசிரியர்கள் வராததால் ஏமாற்றம்

திருத்தணி அரசு பள்ளியில் சிறப்பு வகுப்பு போதிய ஆசிரியர்கள் வராததால் ஏமாற்றம்

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் காலாண்டு மற்றும் மாதிரி தேர்வுகளில் மிக குறைவான மதிப்பெண் எடுத்தவர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களின் திறனை மேம்படுத்த வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டார். அதன்படி நேற்று விடுமுறை ஒட்டி திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவியர் 300 பேர் பள்ளிக்கு வந்திருந்தனர். ஆனால், சிறப்பு வகுப்பு எடுக்க இரு ஆசிரியை மட்டுமே வந்தனர்.தலைமை ஆசிரியை, உதவி தலைமை ஆசிரியர் வரவில்லை. இதனால், 200க்கும் மேற்பட்ட மாணவியர் ஆசிரியைகள் இல்லாததால், வகுப்பறைகளில் இருந்து வெளியேறி பஜாரில் சுற்றித்திரிந்தனர்.ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன், மாணவியர் அனைவரையும் பள்ளிக்கு அழைத்து சென்றார். அங்கிருந்த ஆசிரியர்களிடம் மாணவியரை பள்ளி வளாகத்திற்கு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினார். விடுமுறை நாட்களில் மாணவியருக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தும் போது தலைமை ஆசிரியை, உதவி தலைமை ஆசிரியர் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர் மீது முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை