உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நுாறு நாள் வேலையில் பாரபட்சம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

நுாறு நாள் வேலையில் பாரபட்சம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், சூர்யநகரம் ஊராட்சிக்குட்பட்டது தெக்களூர் காலனி. இங்கு, 100க்கும் மேற்பட்டோர், நுாறு நாள் வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை, 30க்கும் மேற்பட்ட பெண்கள், திருத்தணி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பின், பெண்கள் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு வழங்கியும், பணிதள பொறுப்பாளர், நுாறு நாள் வேலை வழங்குவதில் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்.வேலை வழங்கிய ஆட்களுக்கே மீண்டும் வேலை வழங்குகிறார். எங்களுக்கு மூன்று வாரங்களுக்கு மேலாகியும் நுாறு வேலை வழங்காமல் பணிதள பொறுப்பாளர் செயல்படுகிறார்.எனவே, பணிதள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுத்தும், எங்களுக்கு நுாறு நாள் வேலை வழங்க வேண்டும் எனவும் கூறினர்.மனுவை பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை