தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர்:தமிழக கவர்னர் ரவியை கண்டித்து திருவள்ளூர், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.திருவள்ளூர் ரயில் நிலையம் பகுதியில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மாவட்ட அவைத் தலைவர் திராவிட பக்தன் தலைமையில். கவர்னர் ரவியை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.* பொன்னேரியில், தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலர் டி.ஜெ.கோவிந்தராசன் தலைமை தாங்கினார். அக்கட்சியினர் பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் கூடி, கவர்னருக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, சோழவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கட்சியினர் கொண்டு வந்த வாகனங்கள் பொன்னேரி - செங்குன்றம் சாலையின் இருபுறமும் நிறுத்திப்பட்டதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்ட நேரங்களில் போக்குவரத்து போலீசார் உரிய திட்டமிடல்களை மேற்கொண்டு நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.