உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழுதாவூரில் நாய்கள் தொல்லை

தொழுதாவூரில் நாய்கள் தொல்லை

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்தில் திருவள்ளூர் -- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, தொழுதாவூர் , சின்னம்மாபேட்டை சாலை உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட ஒன்றியத்தின் முக்கிய சாலைகளில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் வாகனத்தில் பயணிப்பவர்களை அச்சுறுத்தி வருகின்றன. மேலும் அவைகளைவிரட்டும்போது, வாகன ஓட்டிகளை கடிக்க வருவது தொடர்வதால்அவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் சிறுவர், சிறுமியர், பெண்களை கடிக்கவும் பாய்கின்றன.நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்து வருவதால் சாலையில் திரியும் நாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை