உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டான் பாஸ்கோ அணி கால்பந்தில் சாம்பியன்

டான் பாஸ்கோ அணி கால்பந்தில் சாம்பியன்

சென்னை: சென்னையில் நடந்த மாவட்ட கால்பந்து போட்டியில், சென்னையின் டான் பாஸ்கோ பள்ளி அணி, 'சாம்பியன்' பட்டம் கைப்பற்றியது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில், குடியரசு மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள், சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகின்றன. இதில், சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி, பெரம்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. 20க்கும் அதிகமான பள்ளி அணிகள், இரு பிரிவாக மோதின. இதன், ஆண்கள் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு போட்டியில், பெரம்பூரின் டான் பாஸ்கோ அணி, சாம்பியன் பட்டத்தையும், சோழிங்கநல்லுாரின் ஜெப்பியார் பள்ளி அணி இரண்டாவது இடத்தையும் பிடித்து அசத்தின. தொடர்ந்து, ஆண்கள் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு போட்டியில், பெரம்பூரின் டான் பாஸ்கோ அணி முதலிடத்தையும், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தன. இந்த போட்டியில், முதலிடம் பிடித்த அணிகள், அடுத்து நடக்கவுள்ள மாநில போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ