உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்கம்பத்தை ஒட்டி கழிவுநீர் கால்வாய்

மின்கம்பத்தை ஒட்டி கழிவுநீர் கால்வாய்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ஜாகீர்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது ராஜபத்மாபுரம் கிராமம். இங்கு பெருமாள் கோவில் தெருவில், 70க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் சேகரமாகும் கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் தொடர் கோரிக்கை வைத்தனர். அதன்படி 15வது நிதிக் குழு மான்யத்தில் 100 மீட்டர் நீளத்திற்கு 2 லட்சத்து 74 ஆயிரத்து 614 ரூபாய் மதிப்பில் கடந்த மாதம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அங்கிருந்த மின்கம்பத்துடன் இணைத்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மின்கம்பம் சேதமடைந்தால் கால்வாயை உடைத்து மின்கம்பத்தை அகற்றும் நிலை உருவாகும். அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கான்ட்ராக்டர்கள் தங்கள் வேலையை துரிதமாக செய்து விட்டு செல்ல வேண்டும் என்ற வேட்கையால், அறைகுறை பணிகள் நடைப்பெறுவதாகவும் இதனால் மக்களின் வரிப்பணம் வீணாவதாக சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர். மேலும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தங்கள் துறையின் கீழ் நடைப்பெறும் பணிகளை உரிய முறையில் ஆய்வு செய்யாததே இதற்கு காரணம். திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் பணிகளை உரிய முறையில் ஆய்வு செய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்த வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை