மேலும் செய்திகள்
சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம் விமரிசை
03-May-2025
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் எஸ்.அக்ரஹாரம் ஊராட்சிக்குட்பட்ட குடிகுண்டா கிராமத்தில், திரவுபதியம்மன் தீமிதி விழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகிறது.நேற்று காலை யாகசாலை பூஜைகளுடன் துவங்கிய திருக்கல்யாண நிகழ்ச்சியில், உற்சவர் அர்ஜுனன், திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் அர்ஜுனன், திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
03-May-2025