உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்நடைகளுக்கு குடிநீர்: ஊராட்சி நிர்வாகம் முயற்சி

கால்நடைகளுக்கு குடிநீர்: ஊராட்சி நிர்வாகம் முயற்சி

பொன்னேரி:பொன்னேரி அடுத்த காட்டாவூர் கிராமத்தில், 1 ஏக்கர் பரப்பளவில் சாமியான்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் தேங்கும் தண்ணீர், கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. கிராமவாசிகளும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது, கோடை காலம் என்பதால், குளத்தில் நீர் இருப்பு படிப்படியாக குறைந்து வந்தது. மேலும் குளம் வறண்டு விடாமல் இருக்க, ஊராட்சி நிர்வாகம் சார்பில், தினமும் ஆழ்துளை கிணற்றில் இருந்து மோட்டார் வாயிலாக தண்ணீர் ஏற்றப்படுகிறது.இதனால், குளம் எப்போதும் நிரம்பி இருக்கிறது. பல்வேறு நீர்நிலைகள் வறண்டு வரும் நிலையில், காட்டாவூர் சாமியான்குளத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கியிருப்பதால் கால்நடைகளுக்கும், கிராமவாசிகளுக்கும் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'கோடையில் ஆடு, மாடுகள் நீரின்றி தவிக்கக் கூடாது என்பதற்காக, மக்களின் ஒத்துழைப்புடன் குளத்திற்கு தினமும் தண்ணீர் ஏற்றப்படுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ