உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா கடத்திய ஓட்டுநர் கைது

கஞ்சா கடத்திய ஓட்டுநர் கைது

கும்மிடிப்பூண்டி: ஒடிசாவில் இருந்து லாரியில் கஞ்சா கடத்திய ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். லாரியில் மறைத்து வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்திய லாரி ஓட்டுநரான, திருவிடைமருதுாரைச் சேர்ந்த பாலசந்தர், 32, என்பவரை கைது செய்தனர். இவர், ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை