உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதை பொருள் விழிப்புணர்வு தனி செயலி துவக்கம்

போதை பொருள் விழிப்புணர்வு தனி செயலி துவக்கம்

திருவள்ளூர், மாணவர்களிடையே போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த தனி செயலி துவக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று, மாணவர்களிடையே போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த 'டிரக் பிரீ டிஎன் ஆப் லோகோ' வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் பிரதாப் இந்த லோகோ செயலியினை துவக்கி வைத்து பேசியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரி நிறுவனங்கள் போதை பொருள் உபாதைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதை பொருட்கள் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிந்தால், இந்த செயிலிகளில் பதிவு செய்ய வேண்டும்.மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை இணைந்து சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பள்ளி மற்றும் கல்லுாரிகளைச் சுற்றியுள்ள 100 மீட்டர் அளவு சுற்றளவில் எவ்வித போதை பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.பள்ளி மற்றும் கல்லூரி முகப்புகளில், 'DRUG FREE TN APP LOGO' செயலியின் போஸ்டர்களை மாணவ - மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிசந்திரன், தனித் துணை கலெக்டர் கணேசன், பொன்னேரி தொடக்க கல்வி அலுவலர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி