உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  வாலிபரிடம் போதை மாத்திரை பறிமுதல்

 வாலிபரிடம் போதை மாத்திரை பறிமுதல்

திருவள்ளூர்: போதை மாத்திரை பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து, 517 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்தில், அங்கிருந்த வாலிபர் ஒருவரை விசாரித்தனர். அதில், சென்னை, சூளைமேடை சேர்ந்த ரகுபதி, 22, என்பதும், பள்ளி மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு விற்பனை செய்வதற்காக, 517 போதை மாத்திரை வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ