மேலும் செய்திகள்
தனியார் பஸ் - வேன் மோதி 30 பேர் படுகாயம்
29-Sep-2025
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் துறை டி.எஸ்.பி., மற்றும் ஓட்டுநர் படுகாயமடைந்தனர். சென்னையைச் சேர்ந்த குமரன், 35, திருவள்ளூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று காலை எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடக்கவிருந்த வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, சென்னை யிலிருந்து அரசு ஜீப்பில் வந்து கொண்டிருந்தார். ஆயுதப்படை பிரிவு காவலர் அருள்ராஜ், 25, ஜீப்பை ஓட்டினார். திருவள்ளூர் - திருமழிசை நெடுஞ்சாலையில், முருக்கஞ்சேரி அருகே வந்த போது நாய் குறுக்கே வந்ததால், கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த இருவரும், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
29-Sep-2025