மேலும் செய்திகள்
எருமைகளால் விபத்து லாரி ஏறி வாலிபர் பலி
16-Oct-2025
வணிக வரி அதிகாரியை மிரட்டிய இருவர் கைது
02-Nov-2025
மதுரவாயல்: நொளம்பூர், ஸ்ரீராம் நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் மோகன் குமார், 61. இவர், மதுரவாயலில் இருந்து கோயம்பேடு நோக்கி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 'பஜாஜ் டிஸ்கவர்' பைக்கில் சென்றார். மதுரவாயல் சந்தை அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்தவரின் தலை மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் ரவி, 50, என்பவரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
16-Oct-2025
02-Nov-2025