உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிகிச்சை பலனின்றி மூதாட்டி பலி

சிகிச்சை பலனின்றி மூதாட்டி பலி

புல்லரம்பாக்கம்:திருவள்ளூர் ஒதிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயம்மாள், 79. கடந்த 25ம் தேதி மதியம் வீட்டில் இருந்தவர், திடீரென மயங்கி விழுந்தார். இவரது மகள் சுமதி மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 26ம் தேதி ஜெயம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து, நேற்று முன்தினம் சுமதி கொடுத்த புகாரின்படி, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ