உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் நடந்து சென்ற மூதாட்டி கேபிள் ஒயரில் சிக்கி காயம்

சாலையில் நடந்து சென்ற மூதாட்டி கேபிள் ஒயரில் சிக்கி காயம்

திருவள்ளூர்:திருவள்ளூரில் கேபிள் ஒயர் அறுந்து விழுந்து சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது விழுந்ததில் அவர் காயமடைந்தார்.திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் குமாரி, 65. இவர் நேற்று முன்தினம் மாலை ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள விநாயகர் கோவில் தெருவில் நடந்து சென்றார்.அப்போது அப்பகுதியில் தனியார் இன்டர்நெட் கேபிள் ஒயர் ஒன்று அறுந்து கிடந்துள்ளது. அந்த ஒயர் மேம்பாலத்தின் மீது சென்ற வாகனத்தில் சிக்கி திடீரென இழுக்கப்பட்டதால் மேம்பாலம் அருகே நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்தில் பட்டு அவர் துாக்கி வீசப்பட்டார். இதில் தலையில் படுகாயமடைந்த மூதாட்டி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவானது. தற்போது இந்த காட்சி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இதுகுறித்து திருவள்ளூர் நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆர்.கே.பேட்டை

நடந்து சென்றவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த எஸ்.பி.கண்டிகையை சேர்ந்தவர் ராஜகோபால், 35. இவரது மனைவி ஹேமலதா, 25. இருவரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் ஆர்.கே.பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். செல்லாத்துார் ஏரிக்கரை அருகே வந்தபோது, இவர்களுக்கு முன்னால் நடந்து சென்ற ஸ்ரீராம், 22, மீது மோதினர். இதில் மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ