வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:வரும், ஜன.1, 2025-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான முகாம் நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி, தாலுகா, மாநகராட்சி அலுவலகம் மற்றும் 3,699 ஓட்டுச் சாவடிகள் அமைந்துள்ள 1,315 பள்ளிகளிலும் வரும் 28 வரை உரிய படிவத்தினை பூர்த்தி செய்து, பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், சிறப்பு முகாம் நாட்களான 16, 17, 23, 24 ஆகிய நாட்களிலும் படிவங்களை பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் பொன்னேரி சப் -- கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், கலெக்டரின் நேர்முக உதவியாளர்- தேர்தல் சத்யபிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.