உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்கப்படும்: சசிகாந்த்

மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்கப்படும்: சசிகாந்த்

ஊத்துக்கோட்டை:“ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்று மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க, திருவள்ளூர் நெடுஞ்சாலை துறையினருடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,” என, திருவள்ளூர் காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் தெரிவித்தார்.ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில், 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள இந்த பாலத்தின் வழியாக, தினமும் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.மேலும், ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களும் சென்று வருகின்றனர். இந்த பாலத்தில் இதுவரை மின் விளக்குகள் அமைக்கவில்லை. இதனால், இரவு நேரங்களில் வாகனங்களின் முகப்பு விளக்குகளின் வெளிச்சத்தில் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுகுறித்து திருவள்ளூர் காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் கூறுகையில், “திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறையினரிடம் பேசி, ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்று மேம்பாலத்தில், விரைவில் மின் விளக்குகள் பொருத்தப்படும்,” என்றார்-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை