செடி, கொடிகள் சூழ்ந்த மின் கம்பம்
தி ருவாலங்காடு மின்வாரிய அலுவலகத்தில் இருந்து கூடல்வாடி பழையனுார் சின்னம்மாபேட்டை உட்பட 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியில் கம்பங்கள் அமைத்து, கம்பி மூலம் மின்சாரம் செல்கிறது. இதில் திருவள்ளூர் --- - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, கூடல்வாடி கிராமத்தில் உள்ள மின்கம்பத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. திருவாலங்காடு மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை சூழ்ந்து வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும். - க. குமார், கூடல்வாடி.