உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  ஆபத்தான நிலையில் மின் ஸ்விட்ச் போர்டு

 ஆபத்தான நிலையில் மின் ஸ்விட்ச் போர்டு

திருவாலங்காடு ஒன்றியம் வேணுகோபாலபுரம், ஊராட்சிக்கு உட்பட்டது ராமலிங்காபுரம் கிராமம். இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு பரேஸ்புரம் செல்லும் பிரதான சாலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மோட்டாருக்கு நீரேற்ற மின் இணைப்பு கொடுக்கப்பட்டு 'ஸ்விட்ச்' போர்டு வைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், அவை துருப்பிடித்து உள்ளன. மேலும், கதவுகள் இல்லாமலும், மின் ஒயர்கள் தெரியும்படியும் உயிரை காவு வாங்கும் வகையில் அபாயகரமாக உள்ளது. மின்வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கா. சித்தன், ராமலிங்காபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ