மேலும் செய்திகள்
26ல் மின் குறைதீர் கூட்டம்
24-Sep-2025
திருத்தணி:திருத்தணியில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. திருத்தணியில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், காலை 11:00 - மதியம் 1:30 மணி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், பழுதடைந்த மின் மீட்டர், மின்கம்பம், குறைந்த மின்னழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து மனு அளிக்கலாம். எனவே, திருத்தணி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மின்நுகர்வோர்கள் பங்கேற்று, தங்கள் பிரச்னைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, திருத்தணி மின்வாரிய பொறுப்பு செயற்பொறியாளர் முருகபூபதி தெரிவித்தார்.
24-Sep-2025