உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரெட்டம்பேடில் கடும் நெரிசல் சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு

ரெட்டம்பேடில் கடும் நெரிசல் சிக்னல் அமைக்க எதிர்பார்ப்பு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையின் முக்கிய சந்திப்பு பகுதியாக, ரெட்டம்பேடு சாலை சந்திப்பு உள்ளது. மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதி என்பதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும்.இடைவெளி இல்லாத வாகன போக்குவரத்து ஒருபுறம், சாலையை கடக்க முடியாமல் தவிக்கும் மக்கள் மறுபுறம் என, கடும் சிரமத்திற்கு பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் ஆளாகி வருகின்றனர்.மூன்று சாலைகளில் இருந்து வரும் வாகனங்கள், இச்சந்திப்பில் இடியாப்ப சிக்கல் போல் சிக்கிக் கொள்வதால், ஜி.என்.டி., சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்த போக்குவரத்து நெரிசலில், அவ்வழியாக கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை செல்லும் ஆம்புலன்ஸ்களும் சிக்க நேரிடுகிறது. சாலை விதிகளை மீறி முண்டியடித்து செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதும் அடிக்கடி நடக்கிறது.எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் நலன் கருதி, ஜி.என்.டி., சாலையில் உள்ள ரெட்டம்பேடு சாலை சந்திப்பில், சிக்னல் அமைக்க வேண்டும். பாதசாரிகள் கடந்து செல்ல 'ஜீப்ரா கிராசிஸ்' ஏற்படுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ