என்.எம்.எஸ்., நகர் சிறுவர் பூங்கா முறையாக பராமரிக்க எதிர்பார்ப்பு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட என்.எம்.எஸ்., நகரில், கடந்த 2013ம் ஆண்டு, நகர் ஊரமைப்பு வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் பூங்கா மற்றும் சிறுவர்களுக்கான ஊஞ்சல், ராட்டினம், சறுக்கு மரம் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டன.கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் பொழுதுபோக்கும் முக்கிய இடமாக, பூங்கா இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம், அந்த பூங்காவை முறையாக பராமரிக்கவில்லை.இதன் காரணமாக, அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்து, செடி, கொடிகள் கருகி, பூங்கா முழுதும் வறண்ட பகுதியாக காட்சியளிக்கிறது.எனவே, பொலிவிழந்து காணப்படும் என்.எம்.எஸ்., நகர் பூங்காவிற்கு, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் புத்துயிர் அளிக்க வேண்டும். மேலும், சிறுவர் - சிறுமியர் விளையாட புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.