மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் நடும் பணி மும்முரம்
12-Sep-2025
திருத்தணி:திருத்தணி- சித்துார் நெடுஞ்சாலையில் உள்ள ரவுண்டானா பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். திருத்தணி - சித்துார் நெடுஞ்சாலை செங்குந்தர்நகர் பகுதியில், திருவள்ளூர், சென்னை, திருப்பதி, சோளிங்கர், பள்ளிப்பட்டு ஆகிய இடங்களுக்கு செல்லும் அனைத்து வகையான வாகனங்கள் பிரிந்து செல்கின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நடந்து வந்தன. இதை தடுக்கும் வகையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன் திருத்தணி நெடுஞ்சாலைத் துறையினர், 1.65 கோடி ரூபாய் மதிப்பில் ரவுண்டானா அமைத்தனர். ரவுண்டானா பகுதியில், சாலைகள் பிரியும் பகுதியில் இடையே தடுப்பும் ஏற்படுத்தியுள்ளனர். அப்பகுதியில் இரவு நேரத்தில் சிலர் அமர்ந்து மது குடிக்கின்றனர். எனவே தடுப்பு பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
12-Sep-2025