உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  எளாவூர் சோதனைச்சாவடியில் ஓட்டுநருக்கு கண் பரிசோதனை

 எளாவூர் சோதனைச்சாவடியில் ஓட்டுநருக்கு கண் பரிசோதனை

கும்மிடிப்பூண்டி: சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில், மாநில எல்லையோர சோதனைச்சாவடி அமைந்துள்ளது. சாலை பாதுகாப்பு கருதி, 'இந்தியா விஷன் இன்ஸ்டிடியூட்' என்ற தொண்டு நிறுவனம் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் துவங்கியது. சோதனைச்சாவடியின் வட்டார போக்குவரத்து அலுவலர் சிவானந்தம் முகாமை துவக்கி வைத்தார். சோதனைச்சாவடி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், கிட்ட பார்வை உள்ளவர்களுக்கு உடனடியாக மூக்கு கண்ணாடி வழங்கப்படுகிறது. துார பார்வை உள்ளவர்களுக்கு, அவரவர் முகவரிக்கு கண்ணாடி தயார் செய்து அனுப்பப்படுகிறது. கண்ணாடி பிரேம்களை ஓட்டுநர்களே தேர்வு செய்துக் கொள்ளலாம். டைட்டன் நிறுவனம், மூக்கு கண்ணாடிகளை இலவசமாக வழங்கி வருகிறது. இந்த முகாம், ஜன., 6ம் தேதி வரை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி