உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வழிப்பறியில் ஈடுபட்ட போலி போலீஸ் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட போலி போலீஸ் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த புட்லூர் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு ரயிலுக்காக காத்திருந்த பயணியிடம், மர்மநபர் ஒருவர் போலீஸ் எனக்கூறி விசாரணை செய்தார். அதன்பின், பயணியின் மொபைல்போன் மற்றும் 'பேஷன் புரோ' இருசக்கர வாகனத்தை வாங்கி கொண்டு திருவள்ளூர் நோக்கி சென்றார்.அப்போது, அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தாலுகா போலீசாரை கண்டதும், மர்ம நபர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோடினார். இதை பார்த்த போலீசார், அவரை விரட்டி பிடித்தனர். அப்போது, அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது. திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், திருவள்ளூர் அடுத்த பழைய திருப்பாச்சூரைச் சேர்ந்த செல்வகுமார், 34, என, தெரியவந்தது. இவர், கடந்த 2024 செப்டம்பர் மாதம் பட்டரைபெரும்புதுார் சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் மொபைல்போன், செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர் மீது வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், செல்வகுமாரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி