உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரிகளில் மீன் வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம்

ஏரிகளில் மீன் வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம்

ஆர்.கே. பேட்டை:ஆர்.கே. பேட்டை தாலுகாவில், ஊராட்சி மற்றும் பொதுப்பணித்துறை சார்பில், 50க்கும் மேற்பட்ட ஏரிகள் அமைந்துள்ளன. ஐந்து ஆண்டுகளாக, ஆர்.கே. பேட்டை சுற்றுப்பகுதியில் பருவ மழை தவறாமல் பெய்து வருவதால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் ஆண்டுதோறும் நிரம்பி வருகின்றன.இதனால், விவசாயம் செழிப்பாக நடந்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து காணப்படுகிறது. நீர் வளம் நிரம்பியுள்ள நிலையில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் மீன் வளர்ப்பதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயத்துடன், மீன் வளர்ப்பும் நல்ல லாபம் கொடுப்பதால், தற்போது, ஏரி, குளங்களில் மீன் குஞ்சுகளை விடுவதில் விவசாயிகள் முழு வீட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து தரமான மீன் குஞ்சுகளை வாங்கி வந்து பாதுகாப்பாக ஏரிகளில் விட துவங்கி உள்ளனர். வரும் கோடைகாலத்தில் ஏரிகளில் நீர்மட்டம் குறையும் நேரத்தில் மீன் பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.கடல் மீன்களைக் காட்டிலும், கிராமப்புறங்களில் ஏறி மீன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் விற்பனைக்கு எந்தவித தயக்கமும் இல்லை. மீன் விற்பனையாளர்கள், ஏரிகளுக்கு வந்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக மீன்களை கொள்முதல் செய்வது வழக்கமாக உள்ளது. தினசரி நிச்சயமான வருவாய் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மீன் வளர்ப்பில் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ