நீர்நிலைகளில் குப்பை கழிவு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
திருவள்ளூர்,:திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது.கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:திண்டிவனம் - நகரி ரயில்பாதைக்கு நிலம் எடுக்கப்பட்டு ஒன்பது மாதங்களாகியும், இழப்பீட்டு தொகை வரவில்லை. கண்ணன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், காலாவதியான மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது.ஊத்துக்கோட்டை, லட்சிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில், குப்பை கொட்டப்பட்டு வருகிறது. கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் சிலர் தண்ணீரை எடுத்துச் செல்கின்றனர். விவசாயிகள் செலுத்தும் பயிர் காப்பீட்டிற்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வருவதில்லை.வேளாண் பொறியியல் துறை வாயிலாக வழங்கப்படும் கருவிகள் பழுதடைந்தால், அதை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் வருவதில்லை.இவ்வாறு அவர்கள் பேசினர்.