உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தரமற்ற உயிர் உரங்கள் விவசாயிகள் ஏமாற்றம்

தரமற்ற உயிர் உரங்கள் விவசாயிகள் ஏமாற்றம்

திருவாலங்காடு, திருவாலங்காடு வட்டார வேளாண் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 25,000 ஏக்கர் பரப்பளவில் நெல், பூ, சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன.விவசாய நிலங்களில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில், 'ரைசோபியம், அஸோடோபாக்டர், அசோஸ்பைரில்லம்' மற்றும் நீல பச்சை பாசி உள்ளிட்ட உயிர் உரங்கள், வேளாண் துறை சார்பில் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.வேளாண் துறை சார்பில் தயாரிக்கப்பட்டு, மானியத்தில் விற்பனை செய்யப்படும் உயிர் உரங்கள், ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் மட்டுமே வழங்கப்படுகிறது.கூடுதல் உரம் தேவைப்படும் விவசாயிகள், வெளிச்சந்தையில் வாங்குகின்றனர். இதை பயன்படுத்தி பல்வேறு உர நிறுவனங்களின் முகவர்கள் தோட்டம், தோட்டமாக சென்று, விவசாயிகளுக்கு தங்கள் நிறுவனத்தின் உரங்களை வழங்குகின்றனர். அவற்றில் பல்வேறு உரங்கள் தரமற்றவையாக இருப்பதால், மகசூல் மற்றும் நோய் பாதிப்பு ஏற்படுகிறது.மானியத்தில் வழங்கப்படும் உயிர் உரம், விவசாயிகளின் தேவைக்கேற்ப வழங்கப்பட வேண்டும். இதனால், விவசாயிகள் ஏமாறுவது தடுக்கப்படும். எனவே, வேளாண் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை