உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பருவ மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

பருவ மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

பொன்னேரி:பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், சம்பா பருவத்திற்கு, 30,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதில், கோளூர், திருப்பாலைவனம், காட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், நேரடி நெல் விதைப்பு முறை பின்பற்றப்பட்டது.நடவு செய்யப்பட்ட விளைநிலங்களில், பச்சைபாசி படர்ந்து சரியான வளர்ச்சியின்றி இருந்தன.விளைநிலங்களுக்கு நேரடியாக கிடைக்க கூடிய சூரிய ஒளி மற்றும் விவசாயிகள் தெளிக்கும் மருந்தினங்கள், வேர்பகுதிக்கு கிடைக்க விடாமல் பச்சைபாசிகள் தடுத்தன.வளர்ச்சி பாதிப்பால் விவசாயிகள் கவலையுற்று, மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். கடந்த சில தினங்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை விவசாயிகளுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.மழையால், விளை நிலங்களில் இருந்த பச்சை பாசிகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டு, நெற்பயிர்கள் பசுமையாக மாறி வருகின்றன.சீரான இடைவெளியில் மழை பொழிவு இருந்தால், நெற்பயிர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி வளரும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை