உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்நடை குடிநீர் தொட்டி சேதம் விவசாயிகள் அதிருப்தி

கால்நடை குடிநீர் தொட்டி சேதம் விவசாயிகள் அதிருப்தி

பள்ளிப்பட்டு, பள்ளிப்பட்டு ஒன்றியம் காக்களூரில் இருந்து நொச்சிலி செல்லும் வழியில் காப்புக்காடு உள்ளது. இந்த காப்புக்காடு வழியாக சாலை வசதி உள்ளது. காப்புக்காட்டை ஒட்டி கால்நடை மேய்ச்சல்வெளி அமைந்துள்ளது.இந்த மேய்ச்சல் பரப்பில் காக்களூர், ராமாபுரம், வெங்கல்ராஜகுப்பம், நொச்சிலி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், கால்நடைகளை மேய்ச்சலுக்காக ஓட்டி வருகின்றனர். காலை - மாலை வரை மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, இங்கு கால்நடை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது.மேலும், குடிநீர் தொட்டியை சீரமைத்து தண்ணீர் நிரப்பாததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.எனவே, கால்நடை குடிநீர் தொட்டியை சீரமைத்து, தண்ணீர் நிரப்ப வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை