மேலும் செய்திகள்
பள்ளிப்பட்டு பஸ் நிலையம் மேம்படுத்துவது எப்போது?
21-Apr-2025
பள்ளிப்பட்டு , பள்ளிப்பட்டு நகரில், நேற்று முதல் சிங்கவால் குரங்கு சுற்றித்திரிகிறது. ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியில் காணப்படும் சிங்கவால் குரங்கு, பள்ளிப்பட்டு நகரில் வலம் வருவது பகுதிவாசிகளுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.புதிதாக நகருக்குள் வலம் வரும் இந்த குரங்குக்கு, பகுதிவாசிகள் பழம், பிஸ்கட் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர். சகஜமாக பழகும் இந்த குரங்கு, எந்த நேரத்திலும் எதிர்மறையான செயலில் ஈடுபடலாம் என்பதால், பள்ளிப்பட்டு வனத்துறையினர் குரங்கை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.நகரின் பல்வேறு பகுதிகளில் சிங்கவால் குரங்கை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். ஆனாலும், குரங்கை பிடிக்க முடியவில்லை. கோடைக்காலம் என்பதால், வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடு காரணமாக, நகர் பகுதிக்கு குரங்கு இடம்பெயர்ந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
21-Apr-2025