உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விழும் நிலையில் உயர்கோபுர மின்விளக்கு கம்பத்தால் அச்சம்

விழும் நிலையில் உயர்கோபுர மின்விளக்கு கம்பத்தால் அச்சம்

பொன்னேரி: கன்டெய்னர் லாரி மோதி சேதமடைந்த உயர்கோபுர மின்விளக்கு கம்பம் விழும் நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பகுதியில், திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையின் மைய தடுப்பின் அருகே, ஐந்து விளக்குகளுடன் கூடிய உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. நீண்ட நாட்களாக பழுதடைந்து கிடக்கும் மின்விளக்கு கம்பம், தொடர் கோரிக்கையின் பயனாக கடந்த மாதம் சீரமைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, மீஞ்சூரில் இருந்து பொன்னேரி நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, உயர்கோபுர மின்விளக்கு கம்பத்தில் மோதியது. இதில், உயர்கோபுர மின்விளக்கு கம்பம் சேதமடைந்து சாய்ந்தது. அதிலிருந்த மின்விளக்குகளும் பழுதாகின. தற்போது, உயர்கோபுர மின்விளக்கு கம்பம் சாய்ந்து, விழும் நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பலத்த காற்று வீசினால், கம்பம் கீழே விழுந்து, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, உடனே மின்கம்பத்தை முழுமையாக அகற்றிவிட்டு, புதிதாக பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை