உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகளால் அச்சம்

தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகளால் அச்சம்

மப்பேடு:மப்பேடு ஏரியிலிருந்து சவுடு மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் செல்வதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு பெரிய ஏரியில், அரசு உத்தரவுப்படி சில நாட்களாக சவுடு மண் அள்ளப்பட்டு, லாரிகள் மூலம் நெடுஞ்சாலை பணி உட்பட பல்வேறு பணிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. இவ்வாறு ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் செல்வதால், சாலையில் சவுடு மண் சிதறி கொண்டே செல்கிறது. இதனால் பரவும் துாசியால், நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மப்பேடு காவல் நிலையம் வழியே தார்ப்பாய் மூடாமல் செல்லும் லாரிகள் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் அலட்சியம் காட்டி வருவதாக, வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ