உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 10 சட்டசபை தொகுதிகளில் இறுதி வாக்காளர்கள்... 35.31   லட்சம்! புதிதாக 1.46 லட்சம் இளம் வாக்காளர்கள் சேர்ப்பு

10 சட்டசபை தொகுதிகளில் இறுதி வாக்காளர்கள்... 35.31   லட்சம்! புதிதாக 1.46 லட்சம் இளம் வாக்காளர்கள் சேர்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில், 10 சட்டசபை தொகுதிகளில், 35.31 லட்சம் பேர் இடம் பெற்றுள்ளனர். புதிதாக, 1.46 லட்சம் இளம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், 10 சட்டசபை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல்அலுவலர் பிரபுசங்கர் வெளியிட்டார்.அப்போது அவர் கூறியதாவது:தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, 2025ம் ஆண்டு ஜன., 1 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள 10 சட்டசபை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பட்டியல் வெளியீடு

கடந்த, 1ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல்களில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக, பொதுமக்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டன.பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலைய அலுவலரால், நேரடி ஆய்வுக்கு பின், தொகுதியை சார்ந்த வாக்காளர் பதிவு அலுவலர்களால், படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்பு குறித்த ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. ஏற்கப்பட்ட படிவங்கள் அடிப்படையில், 2025ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

3,699 ஓட்டுச்சாவடிகள்

இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் 17 லட்சத்து, 38,395 ஆண், 17 லட்சத்து, 91,863 பெண், 787 திருநங்கையர் என, மொத்தம், 35 லட்சத்து, 31,045 பேர் இடம் பெற்றுள்ளனர்.இறுதி வாக்காளர் பட்டியல் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம், அம்பத்துார் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகம்- 1, 8 மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களான அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.மேலும், ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் மற்றும் 3,699 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள 1,315 பள்ளிகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டு பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் போன்ற விபரங்களை அறிந்து கொள்ளலாம்.இளம் வாக்காளர் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025-ன் படி வாக்காளர்பட்டியல் தயாரித்தல் தொடர்பாக கடந்த ஆண்டு அக்.29 - நவ.28 வரை 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களிடம் இருந்து, 1 லட்சத்து, 49,400 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 3,317 தள்ளுபடி செய்யப்பட்டு, 1 லட்சத்து, 46,083 விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டு, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் -தேர்தல், சத்தியபிரசாத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.10 சட்டசபை தொகுதிகளின் இறுதிவாக்காளர் பட்டியல் விவரம்:தொகுதி ஓட்டுச் சாவடி ஆண் பெண் திருநங்கை மொத்தம்கும்மிடிப்பூண்டி 330 1,36,912 1,44,931 40 2,81,883பொன்னேரி தனி 313 1,30,462 1,37,555 33 2,68,050திருத்தணி 330 1,38,048 1,42,626 32 2,80,706திருவள்ளூர் 296 -1,31,765 1,38,857 40 2,70,662பூந்தமல்லி தனி 397 1,89,066- 1,97,677 80 3,86,823ஆவடி 457 2,26,653 2,33,663 92 4,60,408மதுரவாயல் 440 2,21,230 2,20,320 119 4,41,669அம்பத்துார் 350 1,83,234 1,85,337 81 3,68,652மாதவரம் 475 2,40,773 2,45,645 118 4,86,536திருவொற்றியூர் 311 1,40,252 1,45,252 152 2,85,656மொத்தம் 3,699 17,38,395 17,91,863 787 35,31,045

விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்டத்தில், 18 வயதினை பூர்த்தி செய்யும் இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய விரும்புவோர், ஜன., 6 முதல் அனைத்து அலுவலக வேலை நாட்களில் தாலுகா அலுவலகங்களில் படிவம் அளிக்கலாம். மேலும் voters.eci.gov.inஎன்ற இணையதளம் வாயிலாகவும் Voter helplineApp எனும் செயலி வாயிலாகவும் படிவங்களை சமர்ப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை