உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  சாலையில் குப்பை கொட்டிய வியாபாரிகளுக்கு அபராதம்

 சாலையில் குப்பை கொட்டிய வியாபாரிகளுக்கு அபராதம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பஜார் பகுதி, திருவள்ளூர், நாகாலபுரம், சத்தியவேடு சாலைகளில், வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இவர்கள் வீடுகள், கடைகளில் சேகரமாகும் குப்பையை வீடு, கடைகளின் முன் கொட்டுகின்றனர். பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் தினமும் காலையில் அள்ளிச் செல்கின்றனர். சாலையில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என, பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்தது. ஆனால், நேற்று பஜார் பகுதியில் உள்ள காய்கறி, அரிசி கடைக்காரர்கள் குப்பையை சாலையில் கொட்டினர். பேரூராட்சி ஊழியர்கள் சம்பந்தப்ப ட்ட கடை உரிமையாளருக்கு, தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர். சாலையில் குப்பை கொட்டினால் அபராதம், சட்ட நடவடிக்கை தொடரும் என, பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ