உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

புழல்:மாதவரம் மண்டலம் 24வது வார்டுக்கு உட்பட்ட ஜி.என்.டி., சாலை புழல் சுடுகாடு அருகே, மாநகராட்சியின் உரம் தயாரிப்பு கூடம் மற்றும் கிடங்கு உள்ளது. இங்கு 23 மற்றும் 24வது வார்டுகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மளமளவென பரவிய தீயில், அங்கிருந்த பொருட்கள் கொழுந்து விட்டெரிந்தது. தகவல் அறிந்து வந்த செங்குன்றம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அசத்தினர். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை