பழவேற்காடில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம்
பழவேற்காடு: பழவேற்காடு மீனவப் பகுதியில், 40 மீனவ கிராமங்களை சேர்ந்தோர் கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். பல்வேறு பிரச்சனைகளுக்கு தீ ர்வு காண்பது தொடர்பாக நேற்று, மீனவ கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கூட்டம் பழவேற்காடில் நடந்தது. கூட்டத்தில் மீனவர்கள் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவும்போது, மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இதனால், ஆண்டிற்கு, 45 நாட்கள் வாழ்வாதாரம் பாதிக் கிறது. அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வனத்துறையின் கெடுபிடிகளால், எந்தவொரு கட்டமைப்பு பணிகளும் மேற்கொள்ள முடியவில்லை. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழவேற்காடு மீனவ பகுதியில் உள்ள, 40 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ மக்கள் வரும் டிச.,1ல் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.