உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ராக்கெட் ஏவப்பட உள்ளதால் 29ம் தேதி மீன் பிடிக்க தடை

ராக்கெட் ஏவப்பட உள்ளதால் 29ம் தேதி மீன் பிடிக்க தடை

கும்மிடிப்பூண்டி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவு தள மையத்தில் இருந்து, வரும் 29ம் தேதி, காலை 6:23 மணிக்கு, 'ஜி.எஸ்.எல்.வி.,எப்-15' விண்கலம்,விண்ணில் ஏவப்படஉள்ளது.ஸ்ரீஹரிகோட்டா ஏவு தள மையம் அருகே, திருவள்ளூர் மாவட்ட மீனவ கிராமங்கள் அமைந்திருப்பதால், அன்றைய தினம், அசம்பாவிதங்களைதவிர்க்கும் நோக்கில், மீன் பிடி தொழிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.அதன் மீதான சுற்றறிக்கை ஒன்று, மீன் வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் பொன்னேரி உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் சார்பில் அனைத்துமீனவ கிராம தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டது.அதில், வரும் 29ம் தேதிகாலை முதல், மறுஉத்தரவு வரும் வரை,மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல வேண்டாம் என, குறிப்பிடப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ