உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லாரி மோதி விபத்து மீன் வியாபாரி பலி

லாரி மோதி விபத்து மீன் வியாபாரி பலி

சோழவரம்:திருப்பதி அடுத்த சத்தியவேடு பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ், 49; மீன் வியாபாரி. இவர், நேற்று முன்தினம் இரவு, சத்திவேடில் இருந்து சென்னை காசிமேடு மீன் மார்க்கெட் செல்வதற்காக, 'ஹீரோ ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றார்.சோழவரம் செங்காளம்மன் கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இது தொடர்பாக வழக்கு பதிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முரளி, 31, என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ