உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐந்து மருத்துவர்கள் நியமனம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐந்து மருத்துவர்கள் நியமனம்

திருவாலங்காடு:திருவள்ளூர் --- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடில் அமைந்துள்ளது மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்.இங்கு சின்னம்மாபேட்டை, மணவூர், திருவாலங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 40 கிராமங்களில், 80,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்கள், திருவாலங்காடு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுகின்றனர்.கடந்த சில மாதங்களாக போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டனர். கடந்த வாரம் முதல் ஐந்து மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:மருத்துவர்கள் நியமிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் கர்ப்பிணியர் சிகிச்சைக்கு வருகின்றனர். ஸ்கேன் மற்றும் அறுவை சிகிச்சை செய்யும் வசதியில்லாததால், நகரங்களில் உள்ள மருத்துவமனைக்கு செல்கின்றனர்.எனவே, திருவாலங்காடு மருத்துவமனையில் ஸ்கேன் மற்றும் அறுவை சிகிச்சை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை